×

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்‍கு உதவிக்‍கரம் நீட்டிய இந்தியா!: 40,000 டன் டீசல் கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது..!!

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் டீசல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. உணவுக்கே தள்ளாடும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு முடங்கியுள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத காரணத்தால் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு முழுவதும் தெரு விளக்குகளும் அணைக்கப்படுகின்றன. இதனை கண்டித்து பொருளாதார பிரச்னையை சரிசெய்யக்கோரியும், அதிபர் பதவி விலக வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடத்திய பொதுமக்கள், கொழும்பு நகரில் உள்ள அதிபர் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி, போராட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. ராணுவம் மற்றும் போலீசாரின் நடவடிக்கையை மீறி அதிபர் வீட்டுக்குள் பொதுமக்கள் நுழையும் நிலை ஏற்பட்டதால் கோத்தபய ராஜபக்சேவை ராணுவத்தினர் மீட்டு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். இதேபோல் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் போராட்டம் தொடர்ந்து வலுத்து வந்ததால் நேற்று முதல் அவசர நிலையை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவிட்டார்.  இதனிடையே இலங்கையில் மண்ணெண்ணெய்க்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்தியா சார்பில் இலங்கைக்கு கப்பலில் 40,000 டன் டீசல் அனுப்பி வைக்கப்பட்டது. இவை தற்போது கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. …

The post பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்‍கு உதவிக்‍கரம் நீட்டிய இந்தியா!: 40,000 டன் டீசல் கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது..!! appeared first on Dinakaran.

Tags : India ,Lankan ,Colombo Port ,Colombo ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...